×

வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என மிரட்டியதால் இறங்கி வந்த புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுவை நிலவரம் எப்பிடி இருக்கு..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேஜ கூட்டணி ஆட்சியமைத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அமைச்சரவை பதவியேற்காததற்கு யார் காரணம் என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதம் நடந்து வருகிறது. 3 அமைச்சர்களுக்கு அடம்பிடித்த பாஜக 2 அமைச்சர்களுக்கு ஓகே சொல்லி இறங்கி வந்தது. ஆனால் புல்லட்சாமி அடித்து ஆடிய விளையாட்டில்  பாஜகவுக்கு கிலி  பிடித்துவிட்டது. நீங்கள் கேட்கும் இலாகாவை கொடுக்கமாட்டேன். பாஜகவின் அமைச்சர்களும் நான் கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டுமென கறாராக கூறிவிட்டார். ஒரு கட்டத்தில் பாஜக வலிய சென்று 6 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தது, 3 அமைச்சர்கள் என்ற நிலையில்  இருந்து 2 ஆக குறைத்தது என புல்லட்சாமியின் நடவடிக்கை  தாமரை தரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. டெல்லிக்கு பறந்து சென்ற பாஜக எம்எல்ஏக்கள், புல்லட்சாமியின் செயல்பாடுகள் குறித்து  கடுமையாக விமர்சித்தனர்.இதனை தொடர்ந்து பாஜகவுக்கு அமைச்சர்கள் பதவி தேவையில்லை. நீங்களே எடுத்து கொள்ளலாம். வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம் என கடும் கோபத்தில் தகவல் அனுப்பியது.இந்த  முடிவு, ரங்கசாமிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும், பின்னால் தாமரை தரப்பின் அரசியல் ஆட்டம், நிர்வாகத்தை முடக்குவது என நீளும் என்பதால் புல்லட்சாமி முக்கிய இலாகாவை விட்டுக்கொடுத்து செல்லத்தயார் என மெசேஜ் அனுப்பினார். இதனையேற்று சபாநாயகர், அமைச்சரவை பதவியேற்புக்கான தேதி முடிவாகிவிட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா‘‘கூட்டுறவு சங்க நடவடிக்கைகளில் அதிமுகவின் பழைய புள்ளிகள் இன்னும் வேலையைக் காட்டிக்கொண்டிருப்பதாக புகார் வருதே..’’ ‘‘கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவுதுறை இணைபதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் 529 நியாயவிலைகடைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி-பொருள் வழங்குதல் முதல் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் டோக்கன் முறையில் நல்ல முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சங்க நிர்வாகங்கள் பல அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக அமைந்திருக்கும் அரசுக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயர் விளைவிக்கும் வகையில் நியாயவிலைகடைகளின் பணியை முடக்கி விற்பனையாளர்களை இணைப்பதிவாளர் ஒப்புதலின்றி பணியிடமாற்றம் செய்வதோடு விற்பனையாளர்களிடம் பல எதிர்பார்ப்புகளையும் அதிமுகவை சேர்ந்த சில கூட்டுறவு சங்க தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் தலையிட்டு கொரோனா நிவாரண பணி முடியும் வரை விற்பனையாளர்களை பணி இடமாற்றம் செய்ததை ரத்து செய்யவேண்டும் என நியாயவிலை கடை விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘பல ஆயிரம் லிட்டர் மில்க் வேஸ்ட் பண்ணிட்டாங்களாமே..’’‘‘வெயிலூர் மாவட்டத்துல, பால் நிறுவனம் சத்தான ஏரியாவுல நெடுஞ்சாலையோரம் இயங்கி  வருது. இந்த நிறுவனத்துல டெய்லி 1.30 லட்சம், மில்க் கொள்முதல் செய்றாங்க. உள்ளூர் சேல்ஸ்க்கும் அனுப்புறாங்க. இதுல புல் க்ரீம் மில்க் உள்ள பாலும்  விற்பனை செய்றாங்க. சமீபத்துல, ஜென்ரல் மேனேஜர், 12 ஆயிரம் லிட்டர் மில்க்க  கானாற்றுல திறந்துவிட்டுட்டாராம்.  பால் உற்பத்தியாளருங்களுக்கு பணப்பட்டுவாடாவும் செய்யமுடியாம இருக்குற நேரத்துல இப்படி 12,000 லிட்டர் பால் வேஸ்ட் பண்ணிட்டாங்களேன்னு அந்த நிறுவனத்தோட ஸ்டாப்ஸ் புலம்புறாங்களாம். அதுமட்டுமில்லா. நிறைய டாகுமென்ட்ல சைனும் போடுறதே இல்லையாம். மார்னிங், 11 ஓ கிளாக்குக்குத்தான் ஆபிசுக்கு வர்றாராம். 2 டூ 4 வரைக்கும் லஞ்ச்க்கு போய்டுறாராம். அதுக்கு அப்புறமா போனா, ஏன் லேட்டுன்னு கேட்டு, மறுநாள் மாலை வரை காக்க வெச்சிட்டு, அப்பவும்  கையெழுத்து போடுறதில்லையாம். இப்படி பால் நிறுவனத்துல, ஏதேதோ, நடக்குதுன்னு சொல்லி அங்க இருக்குற ஸ்டாப்ஸ் புலம்புறாங்களாம். சம்மந்தப்பட்ட ஹயர் ஆபிசர்ஸ்தான், மில்க்க ஏன் வேஸ்ட் பண்ணாங்க, அங்க வேற என்ன பிரச்னை நடக்குதுன்னு உண்மை நிலவரத்தை விசாரிச்சு ஆக்சன் எடுக்கணும்னு  சொல்றாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி பெண்கள் மேல் மீது பெட்டிஷன் போட்டும் இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசியும் தொல்லை கொடுத்து  வருகிறாராமே’’ என கேட்டார்  பீட்டர் மாமா.‘‘வடசென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில். கண்காணிப்பாளராக ஒரு அதிகாரி வேலை பார்த்து வருகிறார். இவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது உயர் அதிகாரிகளுக்கு பெட்டிசன் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இரட்டை அர்த்த  வசனத்தில் பேசி பல தொல்லைகளையும் கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பணிபுரியும் இடத்தில் தான் படும் கஷ்டங்களை தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் அந்தப் பெண்ணின் தம்பி ஆகிய இருவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அந்த ஆசாமியை அடித்து உதைத்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வரை சென்று அதன் பிறகு பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டது. காவல்துறையினர்  விசாரித்ததில் இந்த பெண்கள் இல்லை என்றால் தனக்கு அதிக வருமானம் வரும். அதனால் இவர்களை இந்த இடத்திலிருந்து காலி செய்வதற்காகத்தான் பெட்டிஷன்  போட்டேன் என கூறியுள்ளாராம். மேலும் அங்கு பணிபுரியும் ஒரு சில பெண்கள்  இவரால் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார்களாம்.  சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இவர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கேள்வி  கேட்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.     …

The post வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என மிரட்டியதால் இறங்கி வந்த புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,Peter ,Teja alliance ,Yananda ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது