×

ஆடு திருடிய வாலிபர் கைது

நெல்லை, மே 23: கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பீட்டர் தெருவை சேர்ந்தவர் இக்னேசியஸ் தீபிகா(31). இவர் ஆடு வளர்த்து வருகிறார். கடந்த 20ம்தேதி இவர் தனது ஆட்டை இடிந்தகரை அந்தோணியார் கோயில் அருகே மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்பு அவர் வந்து ஆடுகளை பார்த்துள்ளார். ஆனால் ஆட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எஸ்ஐ கணபதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இதில் இடிந்தகரை வடக்கு தெருவை சேர்ந்த ஜோயல்(23) என்பவர் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post ஆடு திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ignatius Deepika ,Peter Street, Itindakarai ,Kudankulam ,Idindakarai Anthony temple ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்