×

இசை அமைப்பாளர் இமான் 2வது திருமணம்

சென்னை: தமிழ் திரைப்பட முன்னணி இசையமைப்பாளர் டி இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்ட்ஸ் என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று  பிரிந்து விட்டதாக  இமான் அறிவித்தார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இமான் 2வது திருமணம் செய்துகொண்டார். பழம்பெரும் திரைப்பட விளம்பர வடிவமைப்பாளர் உபால்டுவின் மகள் அமலியை அவர் திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமண  நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அமலி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Iman , Music arranger Iman 2nd marriage
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...