கோட்டயத்தில் இரட்டை ரயில்பாதை பணிகள் பரசுராம், ஐலண்ட் ரயில்கள் ரத்து ஜெயந்தி ஜனதா ஆலப்புழா வழி இயக்கம்: இன்று முதல் மே 28 வரை போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில்:தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: எர்ணாகுளம்- கோட்டயம்- காயங்குளம் பிரிவில் சிங்ஙவனம்- ஏற்றுமானூர் ரயில் நிலையங்கள் இடையே இரட்ைட ரயில்பாதை பணிகள் நடைபெறுவதால் மே 12 (இன்று) முதல் 28 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரயில் எண் 16526 கேஎஸ்ஆர் பெங்களூரு- கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மே 23 முதல் 27 வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16525 கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மே 24 முதல் 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16649 மங்களூரு சென்ட்ரல் -நாகர்கோவில் ஜங்ஷன் பரசுராம் எக்ஸ்பிரஸ் மே 20 முதல் 28 வரையும், ரயில் எண் 16650 நாகர்கோவில் ஜங்ஷன்- மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் மே 21 முதல் 29 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இவை உட்பட 22 ரயில்கள் இவ்வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் எண் 16649 மங்களூர் சென்ட்ரல்- நாகர்கோவில் ஜங்ஷன் பரசுராம் எக்ஸ்பிரஸ் மங்களூர் சென்ட்ரலில் இருந்து மே 12 முதல் 19ம் தேதி வரை புறப்படுவது எர்ணாகுளம் டவுன் - காயங்குளம் ஜங்ஷன் இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஆலப்புழா வழி செல்லும். இதனால் திருப்புணித்துறா, பிறவம் ரோடு, ஏற்றமானூர், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை ஆகிய நிறுத்தங்கள் கிடையாது. எர்ணாகுளம் ஜங்ஷன், சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிப்பாடு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.இதனை போன்று ரயில் எண் 16382 கன்னியாகுமரி- புனே ஜங்ஷன் தினசரி எக்ஸ்பிரஸ் மே 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28 தேதிகளில் ஆலப்புழா வழி செல்லும்.

ரயில் எண் 16525 கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூரு ஐலண்ட் தினசரி எக்ஸ்பிரஸ்  மே 21ம் தேதி  ஆலப்புழா வழி இயக்கப்படும்.ரயில் எண் 16526 கேஎஸ்ஆர் பெங்களூரு- கன்னியாகுமரி ஐலண்ட் தினசரி எக்ஸ்பிரஸ் மே 20, 21 தேதிகளில் ஆலப்புழா வழி செல்லும்.ரயில் எண் 12659 நாகர்கோவில் ஜங்ஷன்- ஷாலிமார் குருதேவ் வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து மே 22 புறப்படுவது, ரயில் எண் 15906 திப்ரூகார்- கன்னியாகுமரி விவேக் சூப்பர் பாஸ்ட் திப்ரூகாரில் இருந்து மே 21ம் தேதி புறப்படுவது, ரயில் எண் 16336 நாகர்கோவில் ஜங்ஷன்- காந்திதாம் ஜங்ஷன் வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மே 24ம் தேதி புறப்படுவது, ரயில் எண் 12660 ஷாலிமார்- நாகர்கோவில் ஜங்ஷன் குருதேவ் வாராந்திர சூப்பர்பாஸ்ட் ஷாலிமாரில் இருந்து மே 25ம் தேதி புறப்படுவது ஆலப்புழா வழி செல்லும்.

ரயில் எண் 16525 கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் 15 முதல் 30 நிமிடங்கள் மே 12, 14, 17 மற்றும் 19 தேதிகளில் சிங்கவனத்தில் நிறுத்தி விடப்படும்.ரயில் எண் 15906 திப்ரூகார்- கன்னியாகுமரி விவேக் சூப்பர்பாஸ்ட் 45 நிமிடங்கள் எர்ணாகுளம் டவுன்- கோட்டயம் இடையே மே 17ல் நிறுத்தி விடப்படும்.ரயில் எண் 16382 கன்னியாகுமரி- புனே ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் காயங்குளம் ஜங்ஷன்- சிங்கவனம் இடையே மே 22ம் தேதி நிறுத்தி விடப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: