×

புதிய அமைப்பு செயலாளர்கள்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவில் புதிய அமைப்பு செயலாளர்களை டிடிவி.தினகரன் நியமனம் செய்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:அமமுக அமைப்பு செயலாளர்களாக மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.சுகுமார் பாபு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பெருமாள், புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் விடங்கர் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதேபோல், அமமுக மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு நிர்வாகிகளாக எல்.சந்திரசேகரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் மா.

தினகரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் பொறுப்பிலிருக்கும் எல்.சந்திரசேகரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு தலைவர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : DTV ,Dinagaran , New Organization, Secretaries, DTV.Dhinakaran
× RELATED மழைநீர் பாதிப்பில் இருந்து...