×

அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.18,629 கோடி இழப்பு: இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள் 67, சட்டமுறைக் கழகம் 1, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் 9 என மொத்தம் 77 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. 31 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பான ₹18,629.83 கோடியில்  எரிசக்தித்துறையில் உள்ள 3 பொதுத்துறை நிறுவனங்களால் மட்டும் ₹13,040.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டில் ₹100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களாக 10 நிறுவனங்கள் பட்டியல் உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிகர இழப்பாக ₹11,964.93 கோடி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ₹1,074.48 கோடி நிகர இழப்பு என 2 மின் துறை சார்ந்த நிறுவனங்களும், போக்குவரத்துக் கழகங்களில் 8 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. 8 போக்குவரத்துக்கழகங்களின் நிகர இழப்பு ₹5,230.58 கோடியில், கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் அதிக அளவாக ₹898.82 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Audit , AIADMK loses Rs 18,629 crore in PSUs: Audit
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...