×

கொரோனா அச்சத்தால் 8 நக்சல்கள் சரண்

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் குழுக்கள் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அவ்வப்போது மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், போலீசாருக்கு எதிராக தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அடிப்படை மருத்துவ தேவைகள் கிடைக்காமல், வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கும் நக்சல்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, நக்சலைட்டுகளை சரண் அடையும்படி மாநில அரசு நிர்வாகமும் தொடர்ந்து கேட்டு கொண்டுள்ளது.  இந்நிலையில், சட்டீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுக்மா மாவட்ட ஆட்சியர் முன் சரண் அடைந்துள்ளனர். கலெக்டர் வினீத் நந்தன்வார் கூறுகையில், ‘நக்சலைட்டுகள் அனைவரும் பொதுவாழ்வில் வரவேண்டும்.   மற்றவர்களும், இதுபோன்ற சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’ என்றார். …

The post கொரோனா அச்சத்தால் 8 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.

Tags : Sugma ,Chattisgarh ,Saran ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன