“மாலத்தீவுல அந்த நடிகை போட்டோ எடுத்து போட்டது சரியா...! நடிகைக்கு அது உரிமைனா, அது பத்தி நான் சொல்றது என்னோட உரிமை: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி

சென்னை: ஆதாரங்களுடன்தான் நடிகர்கள் பற்றி பேசுகிறேன் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள தன்னைப் பற்றி முற்றிலும் தவறாகவும், பொய்யாகவும் பேசி வரும் சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை

எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன்

புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நடிகர், நடிகைகள், சினிமா பிரமுகர்கள் குறித்து தக்க ஆதாரங்களுடன்தான் பேசி வருகிறேன்.

நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசியுள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருகிறேன். மக்கள் அதற்குப் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், எனக்கு தனிப்பட்ட யூடியூப் சேனல் எதுவும் இல்லை. நான் பிற யூடியூப் சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் மட்டுமே பங்கேற்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் யூடியூப் சேனலிலும் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.

அதில் நான் தவறாகப் பேசியிருந்தால் அவர் என்னை தொடர்ந்து பேச அனுமதிப்பாரா? வதந்தி, பொய் என உண்மையை தவிர வேறு எதுவும் பேசியதில்லை; என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது. நான் நடிகைகளைப் பற்றி பொய்யாக பேசுகிறேன் என்றால் அவர்கள்தான் போலீசில் புகாரளிக்க வேண்டும். மாலத்தீவுல அந்த நடிகை போட்டோ எடுத்து போட்டது சரியா? நடிகைக்கு அது உரிமைனா, அது பத்தி நான் சொல்றது என்னோட உரிமை என கூறினார்.

Related Stories: