பட்டினபிரவேசம் பல்லக்கு தூக்கும் விவகாரம் அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: பட்டினபிரவேசம் பல்லக்கு தூக்கும் விவகாரம் தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் தமிழக முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமையிட அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாக்கி டாக்கியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார்.  பட்டினபிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் தமிழக முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். முதல்வர் ஆன்மிகத்திற்கு எதிராக என்றாவது செயல்பட்டுள்ளாரா, சென்னையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான திருக்குளங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு படித்துறை சீர்செய்யப்படும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர்கள் சில பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாக புகார்கள் வந்துள்ளது. அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களை கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கோயில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சி தரும் வகையில் வெள்ளை நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது மற்றும் தேங்காய் நார்களினால் பின்னப்பட்ட தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் தற்காலிக நிழற் பந்தல் அமைக்கவும், பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் அமைக்கவும், அவற்றில் மின்விசிறிகள் பொருத்திடவும், குடிநீர், மோர் மற்றும் எலுமிச்சை பானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: