×

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூ: அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜீ பேசுகையில், ‘‘மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலாத்துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான ரீதியில் செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்: சுற்றுலாத்துறை எந்த ஒரு இடத்தையும் சுற்றுலாத் தலமாக அறிவிப்பது இல்லை. ஓர் இடத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அத்தலத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்து கூடுதல் வசதிகள் செய்யும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை.

இனிவரும் காலங்களில் இத்தலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய துறைகளிடமிருந்து கருத்துரு மற்றும் திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையுடன் பெறப்படுமாயின் சுற்றுலாத்துறையின் நிதிநிலைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சாத்தியகூறு இருக்கிறதா என பரிசீலிக்கப்படும். செல்லூர் ராஜூ: ‘20 லட்சம் மக்கள் வசிக்கும் மதுரையில் பொழுதுபோக்கு என எந்த இடமும் இல்லையென்றார்.அப்போது குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு அண்ணன் செல்லூர் ராஜூ தான் அது நாட்டு மக்களுக்கே தெரியுமென்றார்’. அமைச்சரின் இந்த பேச்சால் சிரிப்பலை எழுந்தது.




Tags : Madurai ,Raju ,Minister , Best entertainment for the people of Madurai Cellur Raju: Laughter by the Minister
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...