அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும்: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

சென்னை: அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், ஆர்.பிரியா தலைமையில் இன்று (06.05.2022) நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம்.வி.பிரபாகர ராஜா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா; அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பேப்பர் பைகளை உபயோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கு செல்லும் போது மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் செல்ல வேண்டும். மயானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: