×

திருத்தணி சட்டமன்றத் தொகுதி இரா.கி.பேட்டையில் சிப்காட் வணிக வளாகம்: தி.மு.க எம்எல்ஏ சந்திரன் கேள்வி; அமைச்சர் தங்கம் தென்னரசு சுவாரஸ்ய பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ என்.சந்திரன்(திமுக) பேசுகையில்: திருத்தணி தொகுதியில் இரா.கி. பேட்டையில் சிப்காட் வணி வளாகம் அமைத்து தர வேண்டும். திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி கோயில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களின் வரிசையில் பன்னிரெண்டாவது ஸ்தலமாக உள்ளது. இக்கோயிலின் சிறப்பு, இல்லை என்று சொல்லாமல் வரம் கொடுக்கக்கூடிய சிவபெருமான் இருக்கக்கூடிய தலமாகும். எனவே அங்கிருந்து வந்த அமைச்சர் இதனை அமைத்து தருவாரா என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்:  திருத்தணியும், அறுபடை வீடுகளிலே முக்கியமான ஒரு வீடு. எனவே, திருச்சுழியிலே இருக்கக்கூடிய திருமேனிநாதர் சுவாமி, திருத்தணியிலே இருக்கக்கூடிய முருகனுடைய ஆணைக்குக் கட்டுப்படக்கூடியவராக இருந்தாலும், தகப்பன் சாமி என்கின்ற பெருமையை முருகன் பெற்றிருந்தாலும், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை  உறுப்பினர், ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வகையில் திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி சொல்வதை, திருத்தணி முருகன் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று அன்போடு நான் கேட்டுக்கொள்கின்றேன். எல்லா சாலைகளும் ரோமை நோக்கி’ என்று சொல்வார்கள். அதைப்போன்று, ‘எல்லா சாலைகளும் திருவள்ளூர் மாவட்டத்தை நோக்கி’ என்ற வகையில் தொழில் வளர்ச்சியில் இருப்பதைப் போன்ற ஒரு நிலைமை இருக்கிறது. காரணம். 1984ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை.

தொடர்ந்து 2008ம் ஆண்டு தேர்வாய்க்கண்டிகையிலே, 2009ம் ஆண்டு மப்பேட்டிலே, அதன் தொடர்ச்சியாக, மணலூரில் நிலை 1-ல் ஆரம்பித்து, மணலூரில் 11ம் நிலை தொழிற்பேட்டை என்று வரிசையாக அந்த மாவட்டத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு, அதாவது, 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், புதிதாக ஒரு சிப்காட் தொழிற்பூங்கா திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் மணலூரில் நிலை III-க்காக நிலம் தேர்வு செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பார்த்தீர்கள் என்றால், திருவள்ளூர் மாவட்டம் ஒரு முக்கியமான தொழில் கேந்திரமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதைக் காணலாம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் துவங்குவதற்கு வருகின்றன. பாதுகாப்பு தொழிற்படத்திலும் அது ஒரு முக்கியயான முனையாக பொன்னேரி உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் கருத்திற்கொள்கிற போது, திருத்தணி தொகுதியில் இருக்கக்கூடிய தொழில்முனைவோர் அல்லது அங்கு தொழில் முனையங்கள் தேவைப்படுபவர்கள், நான் குறிப்பிட்டிருக்கக்கூடிய பூக்காக்களில் இருக்கக்கூடிய தொழில் முனையங்கள் மூலமாக தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார். எம்எல்ஏ, அமைச்சர் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Tags : Thiruthani ,Assembly ,Irakipettai ,Chipkot ,DMK ,MLA ,Chandran ,Minister ,Gold South South , Thiruthani Assembly constituency Irakipettai Chipkot business complex: DMK MLA Chandran question; Minister Gold South South interesting answer
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து