×

சாலை, பொது இடங்களில் கட்டிட கழிவு கொட்டிய 26 பேருக்கு அபராதம்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்றும் முயற்சியில் ‘சென்னை 2.0’ என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு, அதை ஒட்டிய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில், கட்டிட கழிவுகளை முறையாக அகற்றாத வீட்டு உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில், கடந்த மாதம் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டிய 26 பேருக்கு ரூ. 52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, என திருவிக நகர் பொறுப்பு மண்டல அதிகாரி செந்தில்நாதன் தெரிவித்தார்.

Tags : 26 fined for dumping building waste on roads and public places
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...