×

குடலிறக்க நோயால் அவதிப்பட்ட பாப் பாடகர் மரணம்

லண்டன்: பிரபல பாப் பாடகரும், இசை அமைப்பாளரும், நடிகருமான தர்சம் சிங் சைனி (54), கடந்த சில வருடங்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து லண்டன் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு ஹாலிவுட் மற்றும் இசையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்சம் சிங் சைனிக்கு ஹெர்னியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றார். கடந்த மார்ச் மாதம் கோமாவில் இருந்து மீண்ட அவரது உடல்நிலை மெதுவாக முன்னேறி வந்த நிலையில், மீண்டும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாலிவுட் பாடகர் பாலி சாகூ வெளியிட்டுள்ள பதிவில், ‘சகோதரர் தர்சம் சிங் சைனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். உங்களின் திடீர் பிரிவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Hernia, pop singer, death
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை