அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் நேற்றிரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அந்தமானில் உள்ள டிக்லிபூருக்கு தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் கேம்ப்பெல் தளத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஜனவரியில் 24 நாட்களில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் யூனியன் பிரதேசமான லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 3.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: