×

‘கீவ்வின் பேய்’ வீரமரணம்

உக்ரைனின் துணிச்சலான போர் விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா (29). ஒரு குழந்தைக்கு தந்தையான இவர் ‘கோஸ்ட் ஆப் கீவ்’ (கீவ்வின் பேய்) என்று அழைக்கப்பட்டவர். தற்போது ரஷ்யா உடனான போரில், அந்நாட்டின் போர் விமானங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கடந்த மார்ச் 13ம் தேதி மிக்-29 ரக விமானத்தில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்ட போது, தரபால்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் போர் விமானி தரபால்கா கடந்த மாதம் 40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பின்னர் போரில் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு போரில் துணிச்சலுக்கான உக்ரைனின் சிறந்த பதக்கமான ‘ஆர்டர் ஆப் தி கோல்டன் ஸ்டார்’ வழங்கப்பட்டது. உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் இப்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. படையெடுப்பின் முதல் நாளில் 10 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய பின்னர் தராபால்கா உலகளவில் புகழ் பெற்றார்,’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Kiev, Martyrdom
× RELATED திருநங்கைகளை மனநோயாளிகளாக அறிவித்த...