×

மில்லர், திவாதியா அதிரடி பெங்களூரை வீழ்த்தியது குஜராத்

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சங்வான் பந்துவீச்சில் டு பிளெஸ்ஸி டக் அவுட்டாகி வெளியேறினார். கோஹ்லி - ரஜத் பத்திதார் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தனர்.

பத்திதார் 52 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கோஹ்லி 58 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் 2, மேக்ஸ்வெல் 33 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மகிபால் 16 ரன் (8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஆர்சிபி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. ஷாபாஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் சங்வான் 2, ஷமி, ஜோசப், ரஷித், பெர்குசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வென்றது. சாஹா 29, கில் 31, சுதர்சன் 20, ஹர்திக் 3 ரன்னில் வெளியேறினர். மில்லர் 39 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), திவாதியா 43 ரன்னுடன் (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். திவாதியா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : Miller ,Divadia Action Bangalore Beat ,Gujarat , Miller, Diwadia, Bangalore, Gujarat
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்