புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் பிறந்தநாளையொட்டி சகோதரத்துவ பண்பாட்டு கூடல் விழா: பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்பு

சென்னை: புரட்சி பாரதம் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சகோதரத்துவ பண்பாட்டு கூடல் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பகவான் புத்தர் சிலை திறப்பு விழா மற்றும் புத்த வந்தனம், பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பழஞ்சூர் பா.வின்சென்ட், பூவை ஆர்.சரவணன், சி.பி.குமார், வளசை எம்.தர்மன் ஆகியோர் வரவேற்றனர். மாநில நிர்வாகிகள் பூவை எம்.முகிலன், எம்.மாறன், ஐ.ஏழுமலை, பூங்காநகர் பா.காமராஜ், முல்லை கே.பலராமன், பி.வீரமணி, எம்.பி.அன்பரசு, விழா குழு ஒருங்கிணைப்பாளர்கள் டி.ருசேந்திரகுமார், பரணி பி.மாரி கூடப்பாக்கம் இ.குட்டி வழக்கறிஞர் கே.எம்.தர், கே.எஸ்.ரகுநாத், சித்துக்காடு எஸ்.ஏகாம்பரம், என்.மதிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு பகவான் புத்தர் சிலையை திறந்து வைத்து விழா பேருரையாற்றினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சிலையையும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் டாக்டர் பூவை எம்.மூர்த்தியாரின் ஓவியத்தையும், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தந்தை முனுசாமி படத்தையும், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தாயார் ருக்மணி அம்மாள் படத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

மேலும் இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி டாக்டர் கே.வேணுகோபால், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், ஆயர் ஜெயசீலன், திரைப்பட இயக்குனர்கள் ராஜிவ் முருகன், கௌதமன், பேராசிரியர் கதிரவன்,  சமூக ஆர்வலர் பாரதி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில நிர்வாகிகள் மணவூர் ஜி.மகா, வியாச பா.சிகா, பி.சைமன்பாபு, தளபதி செல்வம், பூண்டி பாபு, டி.கே.சீனிவாசன், பிரீஸ் ஜி.பன்னீர், நயப்பாக்கம் டி.மோகன் டி.கே.சி.வேணுகோபால் என்.பி.முத்துராமன், திருமங்கலம் வேதா, அ.ஜான்அலெக்ஸ், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், ஏ.கே.சிவராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாக்கம் வி.ஜி.ஞானமணி, சித்துக்காடு சி.கோபி, ஏ.வி.எஸ்.விமல் ஜி, பாக்கம் ஜி.சரண், திருவள்ளூர் தெற்கு ஒன்றிய தலைவர் திருவூர் ஆர்.கே.நாகா, ஒன்றிய செயலாளர் வேப்பம்பட்டு சி.டி.தியாகு, பொருளாளர் அரண் இ.சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர், செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.டேவிட், அமைப்பாளர் தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், மாவட்ட மாணவரணி தலைவர் நேமம் எம்.மங்கள், செயலாளர் ஏ.பிரகாஷ், நிர்வாகிகள் ஏ.ஆல்பர்ட், எம்.மெர்லின், எம்.செல்வம், இ.திவாகர், ஏ.பி.அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: