×

609 உதவி செயற்பொறியாளர் பணியிட விவகாரம் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம்: சங்கம் அறிவிப்பு

சென்னை: பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில் 609 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி நாளை முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் கடந்த 8 ஆண்டுகளாக உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் வழக்கை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறையில் உதவி செயற்பொறியாளர் 363 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் 244 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் விரைவில் இந்த மதிப்பீட்டை வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி கடந்த 7ம் தேதி மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில், உதவி செயற்பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த 13ம்தேதி முதல் 22ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். இதையடுத்து நாளை முதல் 28ம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags : 609 Assistant Engineer Workplace Issue Three Days Hunger Strike: Association Announcement
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...