×

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது

தா.பழூர்: தா.‌பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ம் தேதி முதல்10ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.தமிழ்மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி நேற்று காலை சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்தநிகழ்வு சித்திரை 10ம் தேதி வரை நீடிக்கும் என்று கோவில் வழிப்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

அப்போது லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வகாட்சியை காண சூரிய உதயத்திற்கு முன்னதாக கோயிலுக்கு வந்து சூரிய ஒளியோடு இறைவனை தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.வருடத்தில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வு கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனை சுற்று பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டு சிவனின் நாமங்களை உச்சரித்து வழிபட்டு செல்கின்றனர்.

Tags : Karaikurichi Pasupathiswarar Temple , There was a rare sight of the sun shining on the lingam at the Karaikurichi Pasupathiswarar Temple
× RELATED காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில்...