×

புதிய தலைவர் நியமன விவகாரம் யுபிஎஸ்சி சிதைப்பு ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய தேர்வாணைய குழுவின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக  மனோஜ் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு குஜராத் மாநிலம் வதோதரா எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மனோஜ் சோனி இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனிக்கு பாஜ, ஆர்எஸ்எஸ்சுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது  என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை ஸ்கீரின்ஷாட் எடுத்து   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர், ‘யுபிஎஸ்சி தற்போது ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்தும் யூனியன் பிரசாரக் சங் கமிஷன் ஆகி மாறி விட்டது. நாட்டின் அரசியல் சட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் ஒரு அமைப்பு என்ற வகையில் தற்போது அது அழிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த புத்தக அறிமுக விழாவில் ராகுல் கலந்து கொண்டு பேசும்போது,  ‘‘நாட்டின் பல்வேறு அமைப்புகளை ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது. அரசியல் சட்டம் என்பது ஒரு ஆயுதம். அமைப்புகள் இல்லையென்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் ஆகி விடும்’’ என்றார்.

Tags : Rahul ,UPSC , Rahul accused of distorting UPSC over appointment of new chairman
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...