×

மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் சிட்சிபாஸ் மீண்டும் சாம்பியன்

மான்டி: ரோலக்ஸ் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினாவுடன் (22 வயது, 46வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் சிட்சிபாஸ் (23 வயது, 5வது ரேங்க்) 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சிட்சிபாஸ் தனது 8வது ஏடிபி பட்டத்தை வசப்படுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக ஏடிபி தொடரின் பைனலுக்கு முன்னேறி இருந்த டேவிடோவிச் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.

Tags : Monte Carlo Masters ,Chitsibas , The Monte Carlo Masters Chitsibas is the champion again
× RELATED சில்லி பாயின்ட்…