×

அரசு தன்னாட்சி கல்லூரி பிரிவில் சென்னை மாநிலக் கல்லூரி தேசிய அளவில் 4ம் இடம்: எஜுகேஷன் வேர்ல்டு வெளியிட்டது

சென்னை:  அரசு தன்னாட்சி கல்லூரி தர வரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சென்னை மாநிலக் கல்லூரி 4ம் இடம் பிடித்துள்ளது. ‘எஜுகேஷன் வேர்ல்டு’ என்ற கல்வி மாத இதழ் தேசிய அளவில் சிறந்த அரசு தன்னாட்சி கல்லூரிகள், தனியார் தன்னாட்சி கல்லூரிகள், தன்னாட்சி அல்லாத கல்லூரிகள் என பல்வேறு நிலைகளில் சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரிகளின் தர வரிசையை ‘எஜுகேஷன் வேர்ல்டு’ வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் அரசு தன்னாட்சி கல்லூரி பிரிவில் 493 மதிப்பெண் பெற்று, சென்னை மாநிலக் கல்லூரி 4ம் இடம்பெற்றுள்ளது.பெங்களூரு அரசு அறிவியல் கல்லூரி 529 மதிப்பெண்ணுடன் முதல் இடமும், எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி 518 மதிப்பெண்ணுடன் 2ம் இடமும், ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மகளிர் கல்லூரி, மைசூரு யுவராஜா கல்லூரி தலா 494 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளன.

Tags : Government Autonomous College ,Chennai State College ,World of Ejucation , Government Autonomous College, Chennai State College, Education World
× RELATED சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம்