×

திசையன்விளை அருகே பரபரப்பு இறந்ததாக நாடகமாடி அடுத்தவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவர்: போலீஸ் பொறியில் சிக்கினார்

திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வல்லவன்விளையைச் சேர்ந்த தில்லைவனப்பாண்டி மகன் பவித்ரன் (25). திருமணமாகாதவர். கார் எெலக்ட்ரீசியன். இவர் கடந்த டிச.24ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தூண்டிலோடு பைக்கில் சென்றார். அப்போது தனது செல்போனை வீட்டில் வைத்து விட்டுச் சென்றார். அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்தபோது அவரது பைக்கும், செருப்புகளும் மட்டும் இருந்தன. கடல் அலை பவித்ரனை இழுத்துச் சென்று பலியாகி இருக்கலாம் என உறவினர்கள் கருதினர்.

திசையன்விளை அருகே ராமன்குடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள். சாந்தி குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த பிப்.26ம் தேதி மாயமானார். அவரது செல்போனும் வீட்டில் இருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் தில்லைவனப்பாண்டி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென மாயமானது. அவர், உவரி போலீசில் புகார் செய்தார். மாயமான பவித்ரனும், சாந்தியும் செல்போனை வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர். மேலும் தில்லைவனப்பாண்டியின் காரும் மாயமானது உவரி இன்ஸ்பெக்டர் செல்விக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது.  

அப்போது சாந்தி, வேறொரு ‘‘சிம்’’ மூலம் சிலரிடம் போனில் பேசுவதாக உவரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த எண்ணை, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்காணித்ததில், அது உளுந்தூர்பேட்டையை அடையாளம் காட்டியது. இதையடுத்து உவரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டின் முன்பு தில்லைவனப்பாண்டியின் மாயமான கார் நின்றது. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்று பார்த்ததில் பவித்ரனுடன், சாந்தி குடும்பம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவர்களை உவரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.அப்போது சாந்தி, ‘‘தான் பவித்ரனுடன் தான் வாழ்வேன், சதீசுடன் செல்ல மாட்டேன்’’ என்று கூறி அழுதார். மேலும் 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்கும்படி கூறினார். போலீசார் அறிவுரை கூறி சாந்தியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

Tags : Thissayanvilai , Vector effect, police trap, arrest
× RELATED திசையன்விளை அருகே கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு