தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு - வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: