×

‘ஸ்கை’ சிக்சர் மழை

புனே: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் (ஸ்கை) அதிரடியாக 37 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 68 ரன் விளாசினார். எம்சிஏ மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்கள் இஷான், கேப்டன் ரோகித் தலா 26 ரன், டிவால்ட் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா, போலார்டு டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, மும்பை 13.2 ஓவரில் 79 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், சூரியகுமார் அதிரடியாக விளையாடி 32 பந்தில் அரை சதம் அடித்தார். மும்பை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. சூரியகுமார் 68 ரன், உனத்கட் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஹசரங்கா, ஹர்ஷல் தலா 2, ஆகாஷ் தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags : ‘Sky’ Sixer Rain
× RELATED 8வது வெற்றியா… ஆறுதலா? சன்ரைசர்ஸ் – டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை