×

மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 257 எம்பிபிஎஸ் இடங்கள் சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரம்பின: பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன

சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 257 எம்பிபிஎஸ் இடங்கள் சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.  இன்னும் 80க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்த காலி இடங்கள், தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட 50 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்று தமிழகத்தில் சேராத மாணவர்களால் ஏற்பட்ட காலி இடங்கள் என மொத்தம் 257  எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

அதில் அரசு கல்லூரிகளில் 7 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 40 இடங்களும் அடங்கும். இதைத் தவிர 500க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வை வரும் 11ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அந்த இடங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப்பதிவு வியாழக்கிழமை மற்றும் நேற்று நடைபெற்றது.

அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டதாகவும், 80க்கும் அதிகமான பிடிஎஸ் இடங்கள் மட்டும் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags : Medical College, MBBS, Special Consultation, BDS
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...