×

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு: தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேம்படுத்துதல் பற்றி ஆலோசனை..!!

டெல்லி: தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்னை குறித்து ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துதல், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கல்வி கொள்கை 2020 போன்றவை குறித்து கலந்து ஆலோசித்ததாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தமிழக ஆளுநர் ரவி சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.


Tags : Governor ,Tamil ,Nadu ,Ravi ,Union ,Education ,Minister ,Dharmendra Pradhan , Union Education Minister Dharmendra Pradhan, Tamil Nadu Governor Ravi
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...