×

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வும், குறைவதுமாக இருந்து வருகிறது. இன்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6615-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை வருகிறது. 11ம் தேதியும் அட்சயதிரிதியை நீடிக்கிறது. அட்சயதிரிதியை அன்று ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது அட்சயதிரிதியை அன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...