×

ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு: ஸ்ரீ ரங்கத்தில் பரபரப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார் ஸ்ரீரங்கத்தில் ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது இதை பார்த்தும் எதிர் திசையில் வந்த மற்றொரு ஆட்டோவின் ஓட்டுநர் தனது ஆட்டோவை சாலை ஓரம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதி விட்டு அந்த ஆட்டோ அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது அங்கிருந்த 60 வயது மூதாட்டி மீது ஆட்டோ மோதியது அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூதாட்டியின் உடலை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களும் மது போதையில் இருந்தது தெரியவந்தது.


Tags : Auto collision, grandmother fatality
× RELATED பொன்னேரி தொகுதி மக்களுக்கு விரைவில்...