×

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் தொடக்கம்: கலெக்டர் அலுவலக சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் 2012 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ₹.129.95 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 99 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மண்டலம் 2 பகுதியில் பணிகள் முடிந்து பரிசோதனை பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. மண்டலம் ஒன்று பகுதியில் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பு முதல் செட்டிக்குளம் வரை மேன் ஹோல் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 2.39 கிலோமீட்டர் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதில் 1400 மீட்டர் பணிகள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலையில் பணிகள் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான மேன்ஹோல்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஓரிரு நாட்களில் பள்ளம் தோண்டும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் போக்குவரத்து அந்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சியில் 35 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பணிகள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து டெரிக் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதான சாலை என்பதால் பகுதி பகுதியாக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் தொடக்கம்: கலெக்டர் அலுவலக சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Collector's Office ,Nagarko ,Kumari District Collector's Office Road ,Office ,Dinakaran ,
× RELATED கூலித்தொழிலாளியிடம் குறிசொல்வதாக...