×

மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றிப்பார்க்க 3 பேட்டரி வாகனம்: வாகனங்களை இயக்குவதற்கு பெண்களுக்கு பயிற்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றிப்பார்க்க 3 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை இயக்குவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா தலத்துக்கு நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள, பல்லவர் கால சிற்பங்கள், பாரம்பரிய நினைவு சின்னங்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த நிலையில், மாமல்லபுரத்தை ஐகானிக் நகரமாக மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்தநிலையில், மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கவும் புராதன சின்னங்கள் பகுதியில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சுற்றிப் பார்க்கவும் தனியார் கார் கம்பெனி சார்பில், மாமல்லபுரத்துக்கு 20 பேட்டரி வாகனங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்படி முதற்கட்டமாக கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க 3 பேட்டரி வாகனங்கள் சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சோலாரில் இயங்கும் அளவிலும் ஒரு வாகனத்தில் 8 பேர் அமர்ந்து செல்லும் அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனிடையே பேட்டரி வாகனங்களை எப்படி இயக்குவது என்பது குறித்து 5 பெண்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Mamallapuram Beach Temple , 3 battery vehicles to tour the Mamallapuram Beach Temple, training for women to drive vehicles
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...