×

இந்தியில் ‘ராக்கி’ ரீமேக்

சென்னை: ராம் இயக்கிய தரமணி படத்தில் ஹீரோவாக அறிமுகமான வசந்த் ரவி, அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்த படம், ராக்கி. இதில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடித்திருந்தார். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்ட இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாக்கோ பிலிம்ஸ் பெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்துள்ள சாணிக் காயிதம் என்ற படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாகவும், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஓடிடியில் வெளியாகும் இப்படத்துக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.




Tags : ‘Rocky’ remake in Hindi
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...