×

50 ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்கள் கண்டறியப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமையில் சென்னை மண்டல ஆணையாளர்களுடன் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 12 ஆண்டுகள் கும்பாபிஷேகம் முடிந்த திருக்கோயில்களில் 25 (ம) 50 ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்கள் கண்டறியப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்,

அதேபோல் 50 ஆண்டுகளுக்கு மேல் பழுதான திருத்தேர்கள் சீர்செய்யவும்,  திருத்தேர் வருகின்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருத்தேர்கள் வீதிஉலா வர நடவடிக்கை மேற்கொள்ளவும்  இணை ஆணையர்களுக்கு அறிவுரை  வழங்கப்பட்டுள்ளது. பலத்திருக்கோயில்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது அத்திருக்கோயில்களில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர், அருள்மிகு கந்தகோட்ட முருகன் திருக்கோயில் திருக்குளம் எந்நிலையிலும் தண்ணீர் வற்றாத நிலையில் உள்ளது, அதேபோல் மற்ற திருக்கோயில்களில் திருக்குளங்களும் நீர் வற்றாத நிலை உருவாக்கப்படும், திருக்கோயில்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், சிறிய திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகையை முறையாக செலுத்தி திருக்கோயில்களின் தினசரி பூஜைகளுக்கு உதவ வேண்டும்,

1000 மேற்ப்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும், திருக்கோயில்களில் உள்ள கோசாலைகள் பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் திருவாற்றியூர், அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் நூலகம் மேம்படுத்துதல், எழும்பூர் அருள்மிகு ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோயில் வருவாயைப் பெருக்கும் வகையில் ரூ50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் மூத்த குடிமக்களுக்கு உறைவிடங்கள் தொடங்குதல் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் அர்ச்சகர்கள் குடியிருப்புகள் கட்டுதல், அருள்மிகு பாதாளபொன்னியம்மன் திருக்கோயில் புதிய தேர் அமைக்கும் பணிகள்,

அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயில் ரூ2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளி திருத்தேர் பணிகள் மற்றும் மாதவரம் கைலாசநாதர்  திருக்கோயிலுக்குப் புதிய திருக்குளம் ரூ2.22 கோடி மதிப்பீட்டில் தொடங்கும் பணிகள் குறித்தும், சென்னை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள்,திருக்குளங்கள், நந்தவனங்கள் மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று பேசினார்.

Tags : Minister ,Sakerbabu , Kudamulukku, Temples, Minister Sekarbapu, Project
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...