×

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கும்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்டபடி அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் கடந்த 3 கூட்டத் தொடர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக ஜூலை மாதம் தொடங்க வேண்டிய மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பரில் தாமதமாக நடத்தப்பட்டது.  இந்நிலையில், நடப்பாண்டில் திட்டமிட்டபடி ஜூலையில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வழக்கமான அட்டவணைப்படி, அடுத்த மாதம் மழைக்கால தொடர் தொடங்கும் என நம்புகிறேன்’’ என்றார். இதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான எம்பிக்கள், நாடாளுமன்ற இரு அவையின் தலைமைச் செயலக பணியாளர்கள், பிற ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, அடுத்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.இதற்கிடையே, மாநிலங்களவை எம்பிக்களாக சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட முன்னாள் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியின் மகனும் மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி மற்றும் கேரளாவில் இருந்து தேர்வான மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், வி.சிவதாசன் ஆகியோர்  அவைத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஸ்வபன் தாஸ் குப்தா, மகேஷ் ஜெத்மலானி இருவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்பிக்கள் ஆவர். புதிதாக பதவியேற்ற 4 எம்பிக்களுக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.எம்பி.க்களுக்கு பிர்லா கடிதம்மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து எம்பிக்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில், மக்களுக்கு துணை நிற்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினராக ஒவ்வொரு எம்பிக்களின் கடமையாகும். மக்களுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், அவர்களின் துயர்களை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உங்கள் சிறப்பான பணிகளை, அனுபவங்களை ஒட்டுமொத்த தேசத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காலகட்டத்தில் தேசிய அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சிறப்பான திட்டம் வகுக்க முடியும்,’ என கூறி உள்ளார். …

The post நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கும்: மத்திய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Monsoon session of Parliament ,Union minister ,New Delhi ,Pragalad Joshi ,Union ,Minister ,Dinakaran ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்