×

ஊட்டி லவ்டேல் பகுதியில் வீட்டுக்குள் உலா வந்த சிறுத்தை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் ரிச்சிங்  காலனி செல்லும் சாலை பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் பங்களா உள்ளது. இதன் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் நேற்று காலை சிசிடிவி., காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சிறுத்தை ஒன்று மாடிபடிகளில் ஏறி வீட்டின் வாசல் பகுதியிலும், பின்பகுதியிலும் சாவகாசமாக உலா வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி சிறுத்தை வந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Lovedale ,Ooty , A leopard roaming around a house in the Lovedale area of Ooty
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...