×

குடியாத்தம் அருகே மோர்தானா அணையை கலெக்டர் ஆய்வு

குடியாத்தம் : குடியாத்தம் அருகே மோர்தானா அணையை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில்,  உள்ள மோர்தானா கிராமத்தில் ஆந்திரா-தமிழ்நாடு வனப்பகுதியில் கவுண்டய மகாநதியின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள புங்கனூர்,  பலமநேர், நாயக்கனேரி வனப்பகுதிகளில் மழைபெய்தால், கவுண்டன்ய மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. வட கிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் முன்பே மோர்தானா அணை தற்போது நிரம்பி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இடது, வலதுபுற கால்வாய்கள் திறந்தால்  ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, சேம்பள்ளி, ரெங்கசமுத்திரம், அக்ராவரம், பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு,  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆழ்துளை கிணறுகள்  போன்றவை நிரம்பும்.இந்நிலையில் வரும் 18ம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையை திறப்பதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்   அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி கடந்த ஆண்டு நிரம்பி கோடி வழியும் இடத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கே.வி.குப்பம்: மோர்தானா அணை இடதுபுற கால்வாய் நீர் செல்லும் வழியான லத்தேரி, அண்ணங்குடி ஏரி கால்வாய், காளாம்ப்பட்டில் உள்ள இடதுபுற கால்வாய், மேல்மாயில் மற்றும் காங்குப்பம் பகுதிகளில் உள்ள இடதுபுற கால்வாய்கள், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை அலுவலர்களுடன் வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் ஆய்வு செய்தார்.இதில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டதா, அணையில் இருந்து வரும் நீர் செல்வதற்கான வழி உள்ளாதா, கால்வாய்களில் வரும் நீர் விவசாய பாசனத்திற்கு பயன்படுமா என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவ்வாறு ஏதேனும் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என்று வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்….

The post குடியாத்தம் அருகே மோர்தானா அணையை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mordana Dam ,Mordana ,Salamukasuntharam ,Dinakaran ,
× RELATED கிராமத்தில் நுழைந்த 10 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு