×

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி; பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.!

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட செய்தியில்;  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu , Admission to physical education courses in all schools in Tamil Nadu; Order of the Commissioner of School Education!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...