×

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜரானார் இளவரசி.: பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முதல்முறையாக ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி நேரில் ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் கடந்த 2 ஆண்டுகளாக ஆணையத்தின் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில், கடந்த 7-ம் தேதி மீண்டும் விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக இளவரசி தற்போது ஆஜராகியுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு இளவரசி வருகை தந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசி ஆணையத்தின் முன் முதல்முறையாக ஆஜராகியுள்ளார்.

மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான இளவரசி உடன் அவரது மகன் விவேக்கும் உள்ளார். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், மகள் கிருஷ்ணபிரியா ஏற்கனவே விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இளவரசி நேரில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Prince Ajaranar ,Armukasami Commission ,Jayalalitha ,Ajar ,Samman , Princess appears before Arumugasami Commission on Jayalalithaa's death
× RELATED சொல்லிட்டாங்க…