×

குளித்தலை அரசு மருத்துவமனையில் 35 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளதாக புகார்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவர்கள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் இரு மாவட்டங்களுக்கும் மைய பகுதியில் அமைந்திருக்கும் குளித்தலை அரசு மருத்துவமனையில் தினமும் புற நோயாளிகளாக 500க்கும் அதிகமானோர் வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் விபத்தில் காயம் அடைந்தவர்களையும் அழைத்து வருவது வழக்கம். தீவிர அவசர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் சிகிச்சை, 100 படுக்கைகள் அடங்கிய சிறப்பு கோவிட் சிகிச்சை பிரிவு, தாய் – சேய் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், உபகரணங்களும் இருக்கும் நிலையில் 35 மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.
கோவிட் சிகிச்சைக்கு 6 மருத்துவர்கள் உள்ள நிலையில் 3 மருத்துவர்கள் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். தமிழக அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

The post குளித்தலை அரசு மருத்துவமனையில் 35 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளதாக புகார் appeared first on Dinakaran.

Tags : bathing state hospital ,KAROOR ,Karur ,government hospital ,bathing government hospital ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...