×

வணிகர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: வணிகர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக விரோதிகள் குடிகாரர்கள் எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு வியாபாரிகளை தாக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. காவல்துறையும் மது போதையில் தகராறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதால் அது குற்றவாளிகளுக்கு மிகவும் சாதகமாகிப் போகிறது. எனவே மது குடித்துவிட்டு வணிக நிறுவனங்களுக்கு சென்று வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் காட்டாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதோடு, வணிகப் பெருமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக முதல்வர் உரிய ஆவன செய்ய வேண்டும். மீஞ்சூர், கேசவபுரத்தில் அடகுக்கடை வணிகர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதி மீது தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Dairy Agents Association , Attack on traders should be arrested under the Gangs Act: Dairy Agents Association demand
× RELATED ஆவின் பணி முறைகேடு பற்றி முன்னாள்...