ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டெல்லி: ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் டெலிகிராம், ஹூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்ப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மன்னார்குடி பாவா பஹ்ருதீன், கும்பகோணம் ஜியாவுதீன் பாகவி மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே இக்பால் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் மேலும் 2 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட இக்பால் என்பவர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: