×

பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் அகர்வால்  நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வங்கியில் பல்வேறு விதமான தணிக்கைகள் நடைபெற இருக்கின்றன.

பேடிஎம் நிறுவனமும் தகுதியான தகவல் தொழில்நுட்ப தணிக்கைநிறுவனத்தை அமர்த்தி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஐடி நிர்வாகத்தையும் தணிக்கை செய்ய வேண்டும். தகவல்தொழில்நுட்ப தணிக்கையாளர்கள் அளிக்கும் அறிக்கைக்குப்பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Reserve Bank ,BDM Bank , RBI bans BDM Bank
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...