×

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமே ரெப்போ விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன. எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.

இந்நிலையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

 

 

The post குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor Shaktikanta Das ,MUMBAI ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!