×

சுதந்திர இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி


புதுடெல்லி: சுதந்திர இந்தியாவில் 3வது முறையாக இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்வில் பிரதமராக மோடி பதவியேற்கிறார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 3வது முறையாக பிரதமரானார். தற்போது இடைக்கால பிரதமராக உள்ள மோடி, 3வது முறையாக இன்றிரவு பிரதமராக பதவியேற்கிறார். இத்தகைய சாதனையை நிகழ்த்திய நாட்டின் முதல் தலைவர் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். கடந்த 1950ல் பிறந்த மோடி, சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தாலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

குஜராத்தில் முதல்வராக 12 ஆண்டுகள் 227 நாட்கள் ஆட்சி நடத்தினார். ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து பாஜகவில் இணைந்த மோடி, 2001ல் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் பிரதமாராக பதவியேற்றார். தேசிய அளவில் கட்சிப் பதவிகளை வகித்த மோடி, ஒரு அரசியல்வாதியாக சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற பதவிகளில் பணியாற்றவில்லை. குஜராத்தில் நேரடியாக முதல்வரானார். பின்னர் இரண்டு முறை பிரதமரானார். தற்போது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.

The post சுதந்திர இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Independent India ,New Delhi ,Presidential House ,Jawaharlal Nehru ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...