×

செஷல்ஸ் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : அன்புமணி!!

சென்னை: வாழ்வாதாரம் ஈட்டச் சென்ற தமிழக மீனவர்கள் செஷல்ஸ் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 தமிழக மீனவர்கள், 9 வட இந்திய மீனவர்கள் என 25 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்திலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற மேலும் 33 மீனவர்கள் கடந்த 7 ஆம் தேதி செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்தோனேசிய எல்லைக்குள் நுழைந்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் நோக்கம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதோ, சட்டவிரோத செயல்களை செய்வதோ அல்ல... வாழ்வாதாராம் ஈட்டுவதற்காக சென்ற அவர்கள் எல்லை தெரியாமல் தான் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Tags : Central Government ,Tamil Nadu ,Seychelles Navy , Seychelles Navy, Tamil Nadu Fishermen, Central Government, Anbumani
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...