×

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் சபரிமலையில் ரிசர்வ் செய்யும் அனைவரும் தரிசன செய்யலாம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பக்தர்கள் இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இது தவிர 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆகவே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் என்ற கட்டுப்பாடு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. வருகிற 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sabarimala , Removal of Corona Restrictions Anyone who reserves in Sabarimala can do darshan
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு