×

முதல் குற்றவாளி யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு 3 ஆயுள் தண்டனை; போராடிய அனைவருக்கும் நன்றி: கோகுல்ராஜ் தாயார் பேட்டி

மதுரை: முதல் குற்றவாளி யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோகுல்ராஜ் திட்டமிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், முதலில் தற்கொலை வழக்காக கருதப்பட்ட நிலையில், உடற்கூராய்வுக்கு பின்பே படுகொலை என தெரிய வந்துள்ளது என கூறினார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவும், தீர்ப்புகளை முழுமையாக படித்து, அதன் மூலம் மேல்முறையீடு செய்தாலும் அதை எதிர்கொள்வோம் என கூறினார்.

கோகுல்ராஜ் தாயார் பேட்டி:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்க போராடிய அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம் என கோகுல்ராஜின் தாய் சித்ரா கூறினார். நீதிபதி வழங்கிய தீர்ப்பு இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என பேட்டியளித்தார். வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கும், விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என கூறினார்.

ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கிதந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கும், விஷ்ணுபிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என கூறினார். என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது என சித்ரா பேட்டியளித்தார். என்னை போன்றவர்களுக்கு வந்த இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என கோரினேன். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என கோகுல்ராஜின் சகோதரர் கூறினார்.

Tags : Yuaraj ,Kokulraj , First convict, Yuvaraju, no bail, 3 life sentences, Gokulraj's mother
× RELATED கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை...