×

மதிமுக, சிபிஎம் கட்சிகளுக்கு எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளை ஒதுக்கியது திமுக!!

சென்னை :கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் -பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில்,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்றமுற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள்போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :-


திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவி ஒதுக்கீடு; 1 நகராட்சி தலைவர்,  3 பேரூராட்சி தலைவர் மற்றும்  3 நகராட்சி துணைத்தலைவர்,  3 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவி ஒதுக்கீடு; 2 நகராட்சி தலைவர்,   3 பேரூராட்சி தலைவர் மற்றும்  3 நகராட்சி துணைத்தலைவர்,  6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு





Tags : CBM , த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...