கோடீஸ்வரர்கள் நாடு இந்தியா 3வது இடம்: கடந்தாண்டை விட 11% அதிகரிப்பு

புதுடெல்லி:  உலகளவில் கோடீஸ்வர்களின் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளியான ‘தி வெல்த் ரிப்போர்ட் 2022’ என்ற பதிப்பில், சொத்து ஆலோசகர் நைட் பிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த 2021ம் ஆண்டில் உலகளவில் அதிக சொத்துகள் வைத்துள்ள தனி நபர்களின் எண்ணிக்கை 9.3 சதவீதம் அதிகரித்து 6,10,569 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5,58,828 ஆக இருந்தது. இந்தியாவில், அதிக சொத்துகள் வைத்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை (ரூ.226 கோடிக்கு மேல்) அல்லது அதற்கு மேற்பட்ட  சொத்துகள் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

 இது ஆசிய பசிபிக்கின் மிக உயர்ந்த சதவீத வளர்ச்சியாகும். இந்தியாவில் அதிக சொத்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 12,287 ஆக இருந்தது. 2021ல் 13,637 ஆக அதிகரித்துள்ளது. இதில், பெங்களூருவில் 17.1 சதவீதத்தில் இருந்து 352 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 12.4 சதவீதத்தில் இருந்து 210 ஆகவும், மும்பையில் 9 சதவீதத்தில் இருந்து 1,596 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் உலக அளவில் அமெரிக்கா 748  கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் உள்ளது, சீனா 554 பேருடன் 2வது இடத்திலும், இந்தியா 145 பேருடன் 3வது இடத்திலும் உள்ளன,’ என்று கூறப்பட்டு உள்ளது.

Related Stories: